நீலகிரி : உதகையில் சொட்டு நீர் பாசனத்தின் மூலம், விவசாயிகள் உறைபனி தாக்கத்திலிருந்து மலை காய்கறி விவசாயத்தைக் காத்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே முத்தோரை மற்றும் நஞ்சநாடு கிராமங்களில் கேரட் மற்றும் பீட்ரூட் விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உறைபனியின் தாக்கத்தால் மலை காய்கறி விவசாயமானது கடந்த இரண்டு மாதங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, தற்போது விவசாயிகள் நவீன முறையான சொட்டு நீர் பாசன முறையைக் கையாளுகின்றனர். இந்த சொட்டு நீர் பாசனத்தின் மூலம் பனியின் தாக்கத்திலிருந்து விவசாயம் பாதுகாக்கப்படுவதோடு, நல்ல விளைச்சலும் கிடைக்கிறது. இதனால், தண்ணீரை கணிசமான அளவில் சேகரிக்க முடியும். மேலும், இந்த பாசனத்தின் மூலம் அதிக விளைச்சல், விளைபொருளின் உயர் தன்மை ஆகியவை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.