கோவை : கோவையில் தொடர் குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு பேரூர் படித்துறையில் இந்து அமைப்பினர் சார்பில் மொட்டை அடித்து தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.

கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில், குழந்தைகள் உட்பட 51 பேர் மரணமடைந்தனர். வருடந்தோறும் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மொட்டை அடித்து தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
இதையடுத்து, கோவை பேரூர் படித்துறையில் 21வது ஆண்டை முன்னிட்டு விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த 3 பேர் மொட்டையடித்தனர். இதன் பின்னர் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். விஷ்வ இந்து மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமையில் 25ம் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.