கோவை : பாஜக கட்சிக்கு, கூட்டணியில் யாரோடும் எந்த பிரச்சனையும் கிடையாது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராகப் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி போராட்டம், தேர்தல் வருவதற்கான அறிகுறி. தேர்தல் வரும் போது இது போல நடக்கும். தமிழகத்தை மிக முக்கியமான மையமாக பாஜக நினைக்கிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு பல திட்டங்களைக் கொடுத்துள்ளது. ஆகவே, பாஜக தலைவர் அமித்ஷா வருகை, பாஜக தொண்டர்களுக்கு உற்சாகத்தைத் தரும். கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசிக்கொண்டு இருக்கின்றோம். அது நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. என்றார்.

அப்போது, கூட்டணிக்காக சில கட்சிகள் தே.மு.தி.க காலில் விழுவதாக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கருத்து தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, "விழுந்தவர்கள் பலமுள்ளவர்களாக இருக்கமாட்டார்கள். ஒரு தூணோடு, இன்னோரு தூண் நின்றால் தான் பலம் பொருந்தியதாக இருக்கும். ஒரு தூணில் இன்னொரு தூண் விழுந்தால், அது பலம் அல்ல. என பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து, தம்பிதுரை கருத்துகள் கூட்டணிக்கு இடையூறாக இருக்கிறதா என்ற கேள்விக்கு, அது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. தம்பிதுரை எனக்கு நெருங்கிய சகோதரர். தினமும் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம், என பதிலளித்தார்.
மேலும், கூட்டணி குறித்த கேள்விக்கு, "பாஜக கட்சிக்கு, கூட்டணியில் யாரோடும் எந்த பிரச்சனையும் கிடையாது. ஓரிரு நாளில் கூட்டணி அறிவிக்கப்படும். அகில இந்திய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கூறியிருப்பது சரியாக இருக்கும். மேலும், கூட்டணி தொடர்பாக இன்று அறிவிக்க வாய்ப்பில்லை, "என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.