கோவை : சின்னதம்பி யானையை பிடிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதையடுத்து, வனத்துறையின் கால்நடை மருத்துவக்குழு இன்று களத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டது.

சின்னத்தம்பியை முகாமுக்கு அழைத்துச் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அதனை பிடிக்கும் முயற்சியில் வனத்துறை இறங்கியுள்ளது. அதன்படி, உடுமலைப்பேட்டை கண்ணாடி புதூரில் இன்று காலை சின்னத்தம்பியை வனத்துறையினுடைய கால்நடை மருத்துவக்குழு மேற்பார்வையிட்டனர்.
ஒரு தனியார் பண்ணையிலிருக்கும் கரும்பு காட்டில் சுற்றி திரியும் சின்னதம்பி யானையை பரிசோதிக்க, டாக்டர் சி.அசோகன் தலைமையிலான குழு முகாமிட்டுள்ளனர். தொடர்ந்து சின்னத்தம்பி கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து வரும் நிலையில், அதனைக் கண்காணிக்க களத்தில் வன அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சின்னத்தம்பியை இடமாற்றுவதற்காக வாவழைக்கப்பட்ட கும்மி யானைகள் கலீம் மற்றும் சுயம்பு ஆகியவற்றிற்கும் அருகிலே முகாமிடப்பட்டுள்ளது. சின்னத்தம்பி முதுமலை அல்லது ஆனைக்கட்டிக்கு லாரி மூலம் இடமாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.