நீலகிரி : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் வெளிநாடு தப்பிச் சென்று விடாமலிருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா இன்று லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினார்.

நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே, இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
மேலும், மீதமுள்ள சயன், மனோஜ், திபு, ஜிதின்ஜாய், ஜம்சீர்அலி, சந்தோஸ்சாமி, உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஜம்சீர் அலி, சதீசன், உதயகுமார், சந்தோஷ்சாமி, மனோஜ், ஜிதின்ஜாய் ஆகிய 6 பேர்கள் மட்டும் இம்மாதம் 8ம் தேதி ஆஜராயினர். பிஜின், திபு, சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகவில்லை. இவர்களின் ஜாமீனை உதகை நீதி மன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து, பிஜின், திபு ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை குறித்து அவதூறாகப் பேசிய வழக்கு விவகாரத்தினால், சாயன் மற்றும் வாளையார் மனோஜ் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், தலைமறைவாக இருக்கின்றனர். ஆகையால், இருவரும் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினார்.