கோவை : கோவையில் சட்டவிரோதமாக அதிகளவு பயணிகளை ஏற்றிக் கொண்டு, சாலையில் அதிவேகமாக ஓடிய தனியார் பேருந்து குறித்த செய்தி ஊடகங்களில் வெளியான சில மணிநேரங்களிலேயே, வழக்குப்பதிவு செய்த போலீசாரின் நடவடிக்கைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கோவை அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை ஆகிய முக்கிய சாலைகளில் தனியார் பேருந்துகளும், அரசு பேருந்துகளும் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக வாகனத்தை இயக்கி வருகின்றனர்.
இதில், குறிப்பாக தனியார் பேருந்துகள் அதிவேகமாக வாகனத்தை இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகிறது.
இதில், "s29" என்ற ஒண்டிப்புதூர் - துடியலூர் வரை செல்லும் TN 66 P 3773 என்ற எண் கொண்ட தனியார் பேருந்து சாலைகளில் அதிவேகமாகப் பேருந்தை இயக்குவதாக ஏற்கனவே புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், இந்தப் பேருந்தானது, கடந்த 11-ம் தேதி மாலை ஹோப்ஸ் பகுதியிலிருந்து சிங்காநல்லூர் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.
இது சுமார் 60 கி.மீட்டரில் இருந்து 70 கி.மீட்டர் வேகத்தில் அதிவேகமாக இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல, அதிக ஹாரன் சத்தத்தை எழுப்பியும் இந்தப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சாலையில் பயணித்த சமூக ஆர்வலர் ரமேஷ் என்பவர் அதிவேகமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்லும் இந்தப் பேருந்தில் பயணிகள் தொங்கியபடி செல்லும் காட்சிகளை பதிவு செய்து ஊடகங்களுக்கு கொடுத்துள்ளார்.
இதையடுத்து, ஊடகங்களில் செய்தி வெளியாகிய சில மணி நேரங்களில், பீளமேடு காவல்நிலையப் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், பீளமேடு அருகே உள்ள கிருஷ்ணம்மாள் கல்லூரியின் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை வழிமறித்து பிடித்தார்.
பின்னர், பேருந்து ஓட்டுநர் மீது அதிவேகமாக வாகனத்தை இயக்கியது, படியில் தொங்கியபடி பயணிகளை அழைத்துச் சென்றது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இது குறித்து உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் கூறுகையில், "அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வரும் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து ஒரே பேருந்து மீண்டும், மீண்டும் விதியை மீறும் போது அதிகபட்ச தண்டனை விதிக்கப்படும்," என எச்சரிக்கை விடுத்தார்.