கோவை : உடுமலையில் விவசாய நிலங்களின் வழியாக வாழ்விடத்தைத் தேடி வரும் காட்டு யானை

கோவை மாவட்டம் தடாகத்தில் இருந்து பிடித்துச் செல்லப்பட்டு டாப்ஸ்லிப்பில் விடப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பி, கடந்த 12 நாட்களாக திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உலா வருகிறது.
கிருஷ்ணாபுரம் வாய்க்கால் பாலம் பகுதியில் இருந்த சின்னத்தம்பி யானை, அங்கிருந்து கிளம்பி மடத்துக்குளம் வந்து அமராவதி ஆற்றை கடந்து திண்டுக்கல் மாவட்டம் சாமிநாதபுரம் பகுதிக்கு சென்றது. பின்னர், அங்கிருந்து மீண்டும் திருப்பூர் மாவட்டத்திற்கு திரும்பிய சின்னத்தம்பி, மடத்துக்குளம் தாலுகா கண்ணாடிப்புத்தூர் பகுதியில் கரும்பு காட்டில் முகாமிட்டுள்ளது.
இதனிடையே, சின்னத்தம்பியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, காட்டு யானை சின்னதம்பியை பிடித்து, தற்போதைக்கு வனத்துறையினர் கட்டுப்பாட்டில் வைக்க நீதிபதிகள் எஸ். மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், "சின்னதம்பியை பிடிக்கும் போது, அவனுக்கு எந்த காயமும் ஏற்படக் கூடாது. சின்னதம்பி வனத்துறை கட்டுப்பாட்டுக்கு வந்த பின்னர், அவனை நிரந்தரமாக முகாமில் வைக்கலாமா..? அல்லது காட்டுக்கு அனுப்பலாமா..? என பின்னர் முடிவு செய்யப்படும்." என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, சின்னதம்பி யானையை வனப்பகுதிகளுக்குள் விரட்டுவதற்காக கும்கி யானைகள் கலீம் மற்றும் சுயம்பு ஆகியவை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், வனக் கால்நடை மருத்துவரும் ஆயத்தமாக இருப்பதால், சின்னத்தம்பியை பிடிப்பது தொடர்பான உத்தரவு வந்தவுடன், அதற்கான பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சின்னத்தம்பி பிடிக்கப்பட்டு, கும்கி யானைகளின் உதவியுடன் லாரியில் ஏற்றப்படும். பின்னர், அங்கிருந்து முதுமலை அல்லது ஆனைமலை புலிகள் காப்பக யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்படும். அங்கு கூண்டில் அடைக்கப்பட்டு, பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.