சி.ஐ.ஐ. சார்பில் எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோர்களுக்கான நிகழ்ச்சி

கோவை : இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தேசிய சிறு தொழில் நிறுவனங்களின் அமைப்பு சார்பில் சிறு, குறு தொழில் நிறுவனங்களில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோர்களுக்கான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவை : இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தேசிய சிறு தொழில் நிறுவனங்களின் அமைப்பு சார்பில் சிறு, குறு தொழில் நிறுவனங்களில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோர்களுக்கான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம், இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) மற்றும் தேசிய சிறு தொழில் நிறுவனங்களின் அமைப்பு சார்பில் சிறு, குறு தொழில் நிறுவனங்களில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோர்களுக்கான நிகழ்ச்சி, கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில், சி.ஐ.ஐ. கோவை மண்டல நிர்வாக இயக்குநர் ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார். 

நேஷனல் ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் நிறுவன நிர்வாக மேலாளர் ஜி. கண்ணன், மாவட்ட தொழில் நிறுவனங்கள் மைய நிர்வாக மேலாளர் கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம், பாரத் பெட்ரோலிய நிறுவனம், போல் இந்தியா, இந்துஸ்தான் பெட்ரோலியம், காமராஜ் போர்ட், எல்.என்.டி ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும், சுமார் 100-க்கும் மேற்பட்ட எஸ்.சி., எஸ்.டி. தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

பொது நிறுவனங்களில் எவ்வாறு பதிவு செய்து தொழில் வாய்ப்புகளைப் பெறுவது என்பது குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது. இறுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் நவநீத சிவகுமார் நன்றியுரை ஆற்றினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...