கோவை : கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்கு மத்தியில், மரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொள்ளாச்சி மண்டல துணை ஆட்சியர் பி. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை : கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்கு மத்தியில், மரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொள்ளாச்சி மண்டல துணை ஆட்சியர் பி. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளின் போது, சாலையோரத்தில் இருக்கும் மரங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பொள்ளாச்சி மண்டல துணை ஆட்சியர் பி. காயத்ரி கிருஷ்ணனிடம் கேட்ட போது, சாலையோரத்தில் இருக்கும் 35 மரங்கள் அகற்றப்பட்டு, வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட இருப்பதாக கூறினார்.

இந்த ஆரம்ப பணிகள் பொள்ளாச்சி மண்டலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
"கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளின் போது, அகற்றப்படும் மரங்களுக்கு பதிலாக, சுமார் 10,000 மரக்கன்றுகள் நடவு செய்ய பொள்ளாச்சி மண்டலத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
இன்று பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை வட்டத்தில் தலா 2,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகள் ஒவ்வொன்றும் சிறு சிறு இடைவேளைகளில் விரைந்து வளரும் வகையிலான முறையில் நடவு செய்யப்பட்டுள்ளது.
எங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சுமார் 20 வகையிலான மரக்கன்றுகளில், 60 சதவீதம் கடினமான தன்மை கொண்ட மரங்களும், 30 சதவீதம் பழங்களைக் கொடுக்கும் மரங்களும், 10 சதவீதம் மலர் மரங்களும் உள்ளன.
இவை பொதுப் பணித்துறை மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகளின் உதவியால் நடவு செய்யப்படுகின்றன. மேலும், 10,000 மரக்கன்றுகள் அடுத்தகட்டமாக வழங்கப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக பணியாற்றி வரும் அனைவருக்கும் நன்றி," என்றார் பொள்ளாச்சி மண்டல துணை ஆட்சியர் பி. காயத்ரி கிருஷ்ணன்.