கோவை : காரமடை அரங்கநாதர் கோவில் நிர்வாகிகள் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து அறநிலையத் துறை உதவி ஆணையாளர் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியில் பழமை வாய்ந்த காரமடை அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நடைபெறும் தேர்த் திருவிழாவிற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்த நிலையில், இந்த வருட தேர்த்திருவிழா வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது. ஆனால், இந்த கோவிலின் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன், கணக்காளர் மகேந்திரன் உள்ளிட்டோர் கோவில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளை செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஆகவே, இவர்கள் இந்த ஆண்டு நடைபெறும் திருவிழாவில் இணைந்து செயல்பட கூடாது எனவும் , முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி காரமடை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்காக அப்பகுதி பொதுமக்கள், கோவையில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையாளருக்கு புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது, அங்கு வந்த உதவி ஆணையாளரின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு பேச்சவார்த்தைக்கு பிறகு சமாதானம் அடைந்தனர். பின்னர், உடனடியாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தேர்த் திருவிழா நடைபெறும் போது, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதாகவும், எனவே உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.