ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பல வடிவங்களில் மத்திய அரசு கேடு விளைவிக்கிறது : வைகோ குற்றச்சாட்டு

திருப்பூர் : தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பல வடிவங்களில் மத்திய அரசு கேடு செய்வதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் : தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பல வடிவங்களில் மத்திய அரசு கேடு செய்வதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே உள்ள நீலிக்கவுண்டம்பாளையம் பகுதியில் உயர்மின் கோபுரம் தொடர்பாக விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, உயர்மின்கோபுரம் அமைக்கும் விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். 

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது :- ஒரு சிலரை தவிர மற்ற விவசாயிகள் அனைவரும் குறுகிய அளவிலான நிலம் வைத்து விவசாயம் செய்பவர்கள். உயர்மின் கோபுரத்தால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. உண்ணாவிரதம் இருக்க நினைக்கும் விவசாயிகளை காவல்துறையினர் மிரட்டுகின்றனர். இதனால், சிறு விவசாயிகள் போராடாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது ஒரு காட்டாட்சியாக , சர்வாதிகார ஆட்சியாக ஜனநாயகத்திற்கு விரோத அரசாக உள்ளது. 



தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு கேடு செய்கிறது. உயர்மின் கோபுரம் என்றால்தான் பணம் பண்ண முடியும். கேபிள் மூலம் என்றால் அதில் பணம் சம்பாதிக்க முடியாது என அரசு நினைக்கிறது. மேலும், அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த விவசாயிகளும் உயர்மின்கோபுரம் விஷயத்தில் மற்ற விவசாயிகளோடு சேர்ந்து போராட முன்வர வேண்டும், எனக் கோரிக்கை வைத்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...