கோவை : ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு, கல்லூரியின் பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை பாலக்காடு சாலையில் உள்ள க.க.சாவடி அருகே இருக்கும் ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். குறிப்பாக, இக்கல்லூரியில் கேரளாவை சேர்ந்த மாணவர்கள் அதிகமாகப் படிக்கின்றனர். இதே கல்லூரியில் உதவி பேராசிரியராக மணிகண்டன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது வகுப்பில் பாடம் எடுக்கும்போது மாணவிகளிடம் பாலியல் ரீதியாகப் பேசுவதாகவும், பாலியல் சீண்டல் செய்வதாகவும் தொடர்ந்து புகார்கள் இருந்து வருகிறது. இதுதொடர்பாக, மாணவ மாணவிகள் பலமுறை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், நிர்வாகத் தரப்பில் இதுவரை பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆகையால், மாணவ, மாணவிகள் இன்று கல்லூரிக்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.