பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்களுக்கு விதிக்கும் அபராதம் மற்றும் தண்டனை விபரங்கள் அடங்கிய மனுவினை அமைச்சர் எஸ்.பி வேலுமணி சட்டசபையில் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சமான ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளதெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அதில், கூறியுள்ளதாவது :- தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், விற்பனை செய்தல், கொண்டு செல்லுதல், பகிர்ந்து அளிக்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு முதல் முறை ரூ.25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 2வது முறை தவறு செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை பிடிபட்டால் ரூ.1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். அதன்பின்னரும் தவறு செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.
வணிக வளாகங்கள், துணிக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் போன்ற மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற குற்றத்துக்கு முதல் தடவை ரூ.10 ஆயிரமும், இரண்டாம் தடவை ரூ.15 ஆயிரமும், மூன்றாம் தடவை ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.
இதேபோல் , பிளாஸ்டிக் தடையை மீறும் மளிகைக் கடைகள் மற்றும் மருந்துக் கடைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். சிறு வணிகர்களுக்கு ரூ.5,00 வரை அபராதம் விதிக்கப்படும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.