கோவை : ஹோப்ஸ் - சிங்காநல்லூர் நோக்கி படியில் தொங்கியபடி அதிகபட்ச பயணிகளுடன் பேருந்தை அதிவேகமாக இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை ஆகிய முக்கிய சாலைகளில் தனியார் பேருந்துகளும், அரசு பேருந்துகளும் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக வாகனத்தை இயக்கி வருகின்றனர். இதில், குறிப்பாக தனியார் பேருந்துகள் அதிவேகமாக வாகனத்தை இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகிறது.
இதில், "s29" என்ற ஒண்டிப்புதூர் - துடியலூர் வரை செல்லும் TN 66 P 3773 என்ற எண் கொண்ட தனியார் பேருந்து சாலைகளில் அதிவேகமாக பேருந்தை இயக்குவதாக ஏற்கனவே புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், இந்தப் பேருந்தானது, கடந்த 11-ம் தேதி மாலை ஹோப்ஸ் பகுதியிலிருந்து சிங்காநல்லூர் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. இது சுமார் 60 கி.மீட்டரில் இருந்து 70 கி.மீட்டர் வேகத்தில் அதிவேகமாக இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல, அதிக ஹாரன் சத்தத்தை எழுப்பியும் இந்தப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், அதிவேகமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்லும் இந்த பேருந்தில் பயணிகள் தொங்கியபடி செல்லும் காட்சிகள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பேருந்துக்குள் பயணம் செய்பவர்களுக்கும், பேருந்துக்கு வெளியில் இருப்பவர்களுக்கும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இதுபோன்று அதிவேகமாக இயங்கும் தனியார் பேருந்துகளைக் கண்டு கொள்ளாமல், வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டுவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, இருசக்கர வாகனம் மற்றும் சிறு சிறு லோடிங் வண்டிகளை குறிவைத்து செயல்படும் காவல்துறையினர், இதுபோன்று ஆபத்தை ஏற்படுத்தும் தனியார் பேருந்துகளின் மீதும் கவனத்தை வைத்துக்கொண்டால் விபத்துக்களை தவிர்க்கலாம் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.