கோவை : உலக வானொலி தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற பழங்கால வானொலி கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

1890ம் ஆண்டு இன்றைய பயன்பாட்டில் உள்ள வானொலியை மார்க்கோனி கண்டுபிடித்தார். இதனால், அவர் வானொலியின் தந்தை என அழைக்கப்படுகிறார். ஆனால், வானொலி சேவைக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி மேம்படுத்தியதில், விஞ்ஞானிகள் எடிசன், ஹேர்ட்ஸ் இந்தியாவின் ஜகதீஷ் சந்திர போஸ், ஜி.டி.நாயுடு என ஏராளமானோருக்கு பங்குண்டு.
அத்தகைய வானொலி, இரண்டாம் உலகப்போரின் போது தகவல் பரிமாற்றத்திற்கு பெரிதும் உதவியது. மேலும், பேரிடர் காலங்களில் தகவல் அறிய வானொலிகளையே மக்கள் பெரிதும் நம்ப வேண்டிய சூழல் இருந்து வந்தது. இந்நிலையில், காலம் மாறும் போது அந்த தொழில்நுட்பம் எல்லாம் மறைந்து, பிற தொழில்நுட்பங்கள் முன்னுக்கு வந்தன.

இதையடுத்து, மக்களிடையே வானொலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 13ம் தேதி வானொலி தினமாக கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2013ம் ஆண்டு அறிவித்தது. அதன்படி, இன்று கோவையில் சாய்பாபா காலனி பாரதி பூங்காவில் வானொலிகள் கண்காட்சி நடைபெற்றது. அபுதாஹிர் என்பவர் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து நடத்திய இக்கண்காட்சியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான வானொலி முதல் சமீப காலத்தில் வெளியான வானொலிகள் வரை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. சுமாராக, 130 வகையான வானொலிகள் அதில் இடம்பெற்றிருந்தன.

இது தொடர்பாக அபுதாஹிர் கூறும் போது, "இந்த கண்காட்சியை பார்வையிடும் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட வானொலி உருவாகக் காரணமாயிருந்த விஞ்ஞானிகள் குறித்து நேரடியாகத் தெரிந்து கொள்கின்றனர். இதனால், ஆழமான புரிதல் ஏற்படுகிறது.. மேலும், இக்கண்காட்சியை பார்வையிடுகையில், இழந்துவிட்ட காலங்களை பலரும் நினைவுப்படுத்தி கொள்வதாக கூறுகின்றனர், "என்றார்.