கோவை : அரசு மருத்துவமனையில் உள்ள முழு உடல் பரிசோதனை மையம் அருகே செருப்பை திருட முயன்ற நபரை மருத்துவமனையின் பெண் பணியாளர் ஒருவர் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநோயாளிகளும், 1,600க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் அரசு மருத்துவமனையில் அடிக்கடி செல்போன் மற்றும் செருப்புகள் திருட்டுப் போவது அதிகரித்துள்ளது. இதனால், மருத்துவமனையின் தனியார் பாதுகாவலர்கள் சந்தேகப்படும் நபர்களைப் பிடித்து காவல் நிலையங்களை ஒப்படைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை முழு உடல் பரிசோதனை மையத்தில், நோயாளி ஒருவரின் செருப்பை சந்தேகத்திற்குரிய நபர் திருடுகையில், கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். இதையடுத்து செருப்பை திருடிய அந்த நபரை மருத்துவமனையின் தூய்மைப்பணியில் ஈடுபடும் பெண் ஒருவர் மடக்கிப் பிடித்தார். பின்னர் மருத்துவமனையில் பாதுகாவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்தவர்கள் அந்நபரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.