கோவை : ஊருக்குள் சுற்றித்திரியும் காட்டு யானை சின்னத்தம்பியின் எதிர்காலத்தை சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பிட உள்ள நிலையில், அதற்கு மதம் பிடித்ததாக வதந்திகள் பரவி வருகிறது.

பொதுவாக, யானைகளின் பருவ வயதான 14வது வயதில் மதநீர் சுரப்பது வழக்கம். அந்த வயதில் தான் அது அகன்ற உலகின் மூலைகளில் அலைந்து, பல பெண்யானைகளுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு மரபணுக்களைப் பரப்பும். மேலும், அந்த 3 மாதங்களில் யானைகளுக்கு டெஸ்டொஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பு அதிகமா இருப்பதால், அவை வீரியமாக இருக்கும்.
இந்நிலையில், சின்னத்தம்பியை தீவிரமாகக் கண்காணித்ததில் மதநீர் சுரப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து திருப்பூர் வனத்துறை பிரிவில் உள்ள வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, சின்னத்தம்பிக்கு மதம் பிடிக்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் மதம் பிடிக்கும் நிலை வரலாம், என்றார்.
நீதிமன்றத்தில் சில நாட்களில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், சின்னத்தம்பி 12வது நாளாக ஊருக்குள் சுற்றி வருகிறது. ஒருவேளை சின்னத்தம்பிக்கு மதம் பிடித்தால் அதை கையாளுவது சுலபமான காரியம் இல்லை. மக்கள் அதிகம் வசிக்கும் ஊருக்குள் சுற்றித்திரியும் சின்னத்தம்பிக்கு மதம் பிடித்து அசம்பாவிதங்கள் நடக்கும் முன், அதனை அங்கிருத்து அப்புறப்படுத்த வனத்துறையினருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
இதனிடையே, கடந்த நவம்பர் மாதம் சின்னத்தம்பிக்கு மதநீர் சுரந்தது. சில மாதங்களுக்கு முன் நடந்த இந்த சுழற்சி மீண்டும் நடைபெற அதிக காலம் எடுக்கலாம். ஆகையால், வனத்துறை சின்னத்தம்பியின் குணநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து நீதிமன்றத்தில் விளக்க வேண்டும். அதன் பின்னர் சின்னத்தம்பியை பிடித்து பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.