உதகையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் : அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம்

நீலகிரி : உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்க முயன்ற போது, பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி : உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்க முயன்ற போது, பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் மழைக்காலங்களில் அடிக்கடி பெரிய அளவிலான இயற்கை பேரிடர்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்கவும், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அழகைப் பாதுகாக்கவும், கடந்த 1993-ம் ஆண்டு மாஸ்டர் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பின், நீலகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டிடங்கள் கட்ட வேண்டுமானால், உள்ளாட்சி அமைப்புகளிடம் மட்டும் அனுமதி பெறாமல், வனத்துறை, புவியியல் துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முறையான அனுமதி பெற வேண்டும். 

மேலும், இந்தக் கட்டிடங்கள் 7 மீட்டருக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், சிலர் விதிமுறைகளை மீறி கட்டிடங்களை கட்டியுள்ளனர். அதன்படி, கடந்த 15 ஆண்டுகளில் 1,300-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவ்வாறு விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி இன்று தொடங்கியது. அப்போது, உதகை மெயின் பஜார் பகுதியில் இருந்த சில குடியிருப்புகளுக்கும் சீல் வைப்பதாக அதிகாரிகள் கூறினர். இதன் காரணமாக, நகராட்சி அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், சில குடியிருப்புகளின் பொருட்கள் வெளியே எடுத்து வைக்கப்பட்டு, சீல் வைக்கும் பணியை தொடர்ந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...