கோவை : கோவையில் வரும் 15-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கோவை : கோவை : கோவையில் வரும் 15-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது :- கோவையில் வரும் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். குறிப்பாக, 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் முதல் 22 டிகிரி செல்சியசாகவும், காலைநேர காற்றின் ஈரப்பதம் 80 முதல் 85 சதவிகிதமாகவும், மாலைநேர காற்றின் ஈரப்பதம் 40 சதவிகிதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது. சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு 6 கி.மீ. முதல் 8 கி.மீ. அளவுக்கு பெரும்பாலும் கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும்.
மேலும், மேற்குறிப்பிட்ட நாட்களில் மழை பெய்த பிறகு, தொடர்ந்து வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து பயிர்களுக்கும் மண்ணின் ஈரத்தை பொறுத்து உடன் நீர்பாசனம் செய்ய வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.