நீலகிரி : குன்னூரில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பனியின் தாக்கம் அதிகம் காணப்பட்ட நிலையில், தற்போது காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், உறைபனியின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும். குறிப்பாக, நவம்பர் முதல் பிப்ரவரி வரை உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். சில சமயங்களில் மார்ச் மாதம் முதல் வாரம் வரையிலும் பனிப்பொழிவு காணப்படும். இந்த முறையும், வழக்கம் போல், கடந்த நவம்பர் மாதம் தொடங்கி 4 மாதங்களாக உறைபனி கொட்டி தீர்த்தது.
தொடக்க நாட்களில் பனியின் தாக்கம் சற்று குறைந்த காணப்பட்ட போதிலும், பின் பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாக இருந்தது. அதேபோல், 40 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை பனியின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்தனர். கடும் பனிப்பொழிவால் ஜனவரி மாதம் முழுக்க நீலகிரி மாவட்டத்தில் குளிர் வாட்டியெடுத்தது.
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பல நாட்கள் 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலைச் சென்றது. பனியின் தாக்கம் 4 மாதங்களாக நீடித்த நிலையில், பெரும்பாலான தேயிலை தோட்டங்களும், காய்கறி தோட்டங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டன. அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டியெடுத்த நிலையில், தேயிலை தோட்டம் மற்றும் காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக நீலகிரியில் பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. இதனால், குளிரும் குறைந்துள்ளது. எனவே, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இருப்பினும், கூடலூர் போன்ற பகுதியில் பசுந்தேயிலையை தாக்கும் இலை சுருட்டல் நோய் காரணமாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கூடலூர், பந்தலுார் பகுதிகளில் தொடரும் காலநிலை மாற்றத்தால், தேயிலை செடிகளை சிவப்பு சிலந்தி நோய் தாக்கி வருகிறது. மேலும், கவாத்து வெட்டிய தேயிலை செடிகளில் இலை சுருட்டல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் கவலை அடைந்துள்ள விவசாயிகள், 'இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்' என வலியுறுத்தியுள்ளனர்.
தேயிலை வாரிய அதிகாரிகள் கூறுகையில், "தேயிலை செடிகளை தாக்கும் சுருட்டல் நோய்க்கு குறிப்பிட்ட சீசன் ஏதும் இல்லை. கவாத்து வெட்டிய தேயிலை செடிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். நோய் தாக்குதலுக்கு உள்ளான பகுதியை அகற்றி, அதனை அழிக்க வேண்டும். மேலும், வாரிய அறிவுரைப்படி, பூச்சி கொல்லி மருந்துகளை தெளித்தால், கட்டுப்படுத்த முடியும்," என்றனர்.