கோவை : கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்ட விவசாயம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் தொழில்முனைவோர்கள் ஆகியோர் பயன்படும் வகையில் பா.ஜ.க.வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும் என அக்கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ் தெரிவித்தார்.
கோவை : கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்ட விவசாயம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் தொழில்முனைவோர்கள் ஆகியோர் பயன்படும் வகையில் பா.ஜ.க.வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும் என அக்கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ் தெரிவித்தார்.
கோவை - அவினாசி சாலை அண்ணாசிலை அருகே உள்ள இந்திய தொழில் வர்த்தக சபையின் அலுவலகத்தில் கோவை, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளித்துறையினரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பா.ஜ.க. மாநில துணை தலைவர் ஜி.கே. நாகராஜ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், பா.ஜ.க. தேசிய செயலாளர் முரளிதர ராவ், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் ஜவுளித்துறையினர் தங்களது கோரிக்கைகளை விளக்கியதுடன் மனுவாகவும் அளித்தனர்.

அப்போது நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய செயலாளர் முரளிதரராவ் பேசியதாவது :- தொழில்முனைவோர்கள் தான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள். அதில், தனியார் துறை மற்றும் தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பது அவசியமானது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பா.ஜ.க. தயாரிக்கவுள்ள குறும்படத்திற்காக 'பாரத் மன்கீ பாத் மோடி கே சாத்' நிகழ்ச்சி மூலம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த காஷ்மீர் முதல் கன்னியாகுமரி, அருணாச்சலம் முதல் குஜராத் வரையிலான 10 கோடி மக்களிடம் தகவல்களை பெற முனைந்துள்ளோம்.

இந்நிகழ்ச்சிக்காக அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் உட்பட பல தலைவர்கள் பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளனர். பா.ஜ.க. ஒரு குடும்பத்தை சார்ந்தவர்கள் இல்லை. பிரதமர் மோடி மாநில அரசுக்கு அறிவுரை வழங்கினால், மாநில அரசு மோடி அரசுக்கு துணை நிற்க மாட்டார்கள் என்பதால், மோடிக்கு தனி வலிமையை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் 360 டிகிரி வளர்ச்சி இருக்கும், என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு வழங்கும் ஜவுளித்துறையில் இந்தியாவிலேயே கோவை, திருப்பூர், கரூர் ஆகிய பகுதிகள் முக்கியமானவை. மக்களுடன் மோடிக்கான தொடர்பு அதிகரித்திருப்பதால் தமிழகத்தில் மக்களிடையே பா.ஜ.க.,விற்கான ஆதரவு பெருகி உள்ளது. நட்பான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வளர்ச்சி மற்றும் நேர்மறையான அரசியல் வழங்கும் வகையில், பா.ஜ.க. தமிழகத்தில் கூட்டணி அமைக்கப்படும். தம்பிதுரை பேச்சு அ.தி.மு.க. தலைமையிலிருந்து வரவில்லை. கூட்டணி பொருத்தவரை எந்த கட்சியிடனும் பிரச்சினை இல்லாமல் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் கூட்டணி அறிவிக்கப்படும்," என்றார்.
