கோவை : வேறு மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு 75 நாட்கள் ஆன நிலையில், இன்னும் பணியில் சேராத ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்களை பிரிக்கால் நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கோவையில் உள்ள எங்களது தொழிற்சாலைகளில் சி.பி.ஐ. (எம்.எல்.) அரசியல் கட்சியைச் சார்ந்த ஏ.ஐ.சி.சி.டி.யூ. அமைப்பின்கீழ், “கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமைச் சங்கம்” என்ற சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம் துவங்கிய நாள் முதலே இந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு எங்களது நிறுவனத்திலும், நிறுவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி வந்தனர்.
இந்த நிலையில், எவ்வித நியாயமான காரணமுமின்றி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி இந்த சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி, சுமார் 100 நாட்களுக்கும் மேலாக நடத்தினர். மேலும், இந்த காலகட்டத்தில் நிறுவனத்திற்கு எதிரான பல பொய் பிரச்சாரங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, தங்களது வாடிக்கையாளர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் நிறுவனத்தின் நன்மதிப்புக்குக் களங்கம் ஏற்படுத்தினர்.
கோவையில் உள்ள எங்களது தொழிற்சாலைகளில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மேற்படி சங்கத்தினரால் இத்தகைய போராட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட்டதால், எங்களது வாடிக்கையாளர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை கோவை அல்லாத தங்களின் இதர தொழிற்சாலைகளில் இருந்து சப்ளை செய்ய வலியுறுத்தினர். இதனால், கோவை தொழிற்சாலைகளுக்கான ஆர்டர்கள் படிப்படியாக குறைந்தது. இந்த சூழ்நிலையில், வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டு வந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் கோவையில் வேலை வாய்ப்பு வழங்க இயலாத சூழலிலும், கணிசமான தொழிலாளர்களுக்கு கோவையிலும், இதர தொழிலாளர்களுக்கு எங்களது இதர தொழிற்சாலைகளிலும் தற்காலிகமாக பணியிட மாறுதல் செய்து, ஒரு நாள்கூட ஊதிய இழப்பின்றி பணி வாய்ப்பு வழங்கப்பட்டது.
தொழிலாளர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்ட இடத்தில் சென்று பணிக்கு ஆஜராக ஏதுவாக கூடுதல் நிதி சுமையையும் நிர்வாகமே ஏற்றுக் கொண்டது. எங்களது நிறுவனம் தொழிலில் நீடித்து வியாபாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும், தொழிலாளர்களுக்கு பணியிழப்பு ஏற்படுவதைத் தவிர்த்து அவர்களது பணியை உறுதி செய்யவும், இந்நிறுவனத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் சார்ந்துள்ள சுமார் 5,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் நிர்வாகத்தின் இந்த முடிவு அத்தியாவசியமான ஒன்றாகும்.
மேலும், இந்த உத்தரவானது, அனைத்து தொழிலாளர்களது பணிநியமன உத்தரவிலும், தற்போது அமுலில் உள்ளதும், மேற்படி ஏ.ஐ.சி.சி.டி.யூ. சங்கம் நிர்வாகத்துடன் ஏற்படுத்திக் கொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்திலும் தொழிலாளர்களை தொழிற்சாலைக்கு உள்ளேயும், வெளியேயும் பணியிட மாறுதல் செய்ய நிர்வாகத்திற்கு உள்ள உரிமை இருதரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதன் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆனால், எங்களது நிறுவனம் தற்போது சந்தித்து வரும் கடுமையான சூழலை நன்கு புரிந்து கொள்ளாமலும், ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கத்தின் தவறான வழிகாட்டுதலாலும், ஒரு சில தொழிலாளர்களைத் தவிர மற்ற தொழிலாளர்கள் நிர்வாகத்தின் தற்காலிக பணியிட மாறுதல் உத்தரவை ஏற்க மறுத்து வருகின்றனர். அத்துடன், நிர்வாகத்திற்கு எதிரான பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு, பணிக்கு ஆஜராகாமல் நிறுவனத்திற்கு கூடுதல் இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை அவர்களுக்கான பணியிடத்தில் சென்று பணிக்கு ஆஜராக நிர்வாகம் கடந்த 75 நாட்களில் பலமுறை கடிதங்கள் அனுப்பியும் எவ்வித பலனும் ஏற்படவில்லை.
எனவே, வேறு வழியின்றி சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை சட்ட விதிகளுக்கு உட்பட்டு நேற்று முதல் பணி நீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இருப்பினும், இந்த நிலையிலாவது, சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் தங்களது பணிநிலை கடமை பொறுப்புகளை உணர்ந்து தற்காலிகமாகப் பணியிட மாறுதல் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று எவ்வித நிபந்தனையுமின்றி பணியில் சேர எழுத்து மூலமாக விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில், மனிதாபிமான அடிப்படையில், நிர்வாகம் அதுகுறித்து உரிய முறையில் பரிசீலனை செய்யவும் தயாராக உள்ளது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.