நீலகிரி : உதகை படகு இல்லம் ஏரியில் அதிகரித்துள்ள சகதியால், ஏரியின் நீர்மட்டம் 8 அடிக்குக் குறைந்துள்ளது.

உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்வதை மிகவும் விரும்புகின்றனர். இந்த ஏரியில் நாளுக்கு நாள் கழிவுநீர் நிரம்புவதுடன், அதனுடன் சேர்ந்து வரும் பிளாஸ்டிக் கழிவுகள் ஏரியை ஆக்கிரமித்துள்ளது. கோடப்பமந்து கால்வாயில் இருந்து செல்லும் தண்ணீர் ஏரியின் நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்படாமல், நேரடியாக ஏரிக்கு செல்வதால், அப்பகுதி முழுவதும் சேறும், சகதியாக இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உதகை படகு இல்லம் ஏரியில் ஆய்வு செய்தனர். ஆனால், அதற்குபின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, கழிவுநீர், சகதி படகு இல்லம் ஏரியில் அதிகரித்ததால், 8 அடிக்கு நீர்மட்டம் குறைந்துள்ளது. குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே படகு சவாரி செய்ய வேண்டியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் 'அப்செட்' ஆகியுள்ளனர். மேலும், ஏரி நீரில் கடும் துர்நாற்றம் வீசுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.

இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், "தற்போது, படகு சவாரி செய்வதில் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டு கோடை சீசனுக்குள் ஏரியில் சேர்ந்துள்ள சகதியை அகற்றி, சுற்றுலாப் பயணிகள் தடையின்றி சவாரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனக் கூறியுள்ளனர்.