பந்தலூரில் பிடிபட்ட சிறுத்தையை வண்டலுார் மிருக காட்சி சாலையில் விட திட்டம் : வன அலுவலர் தகவல்

நீலகிரி : பந்தலுார் பாட்டவயல் பகுதியில் பிடிக்கப்பட்ட சிறுத்தையை, விரைவில் வண்டலுார் மிருக காட்சி சாலைக்கு கொண்டு விட திட்டமிடப்பட்டுள்ளது.

நீலகிரி : பந்தலுார் பாட்டவயல் பகுதியில் பிடிக்கப்பட்ட சிறுத்தையை, விரைவில் வண்டலுார் மிருக காட்சி சாலைக்கு கொண்டு விட திட்டமிடப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே பாட்டவயல் பகுதியில் ஒருவரது வீட்டிற்குள் கடந்த 5ம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. தகவலறிந்த வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து, பாதுகாப்பாக பிடித்தனர். இந்நிலையில், பிடிபட்ட சிறுத்தையின் முதுகு, கால்பகுதிகளில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வன அலுவலர் ராகுல் உத்தரவுபடி, கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். 



வனச்சரகர் மனோகரன் மேற்பார்வையில், தினசரி மூன்று நேரமும் டாக்டர்கள் பரத்ஜோதி, நந்தினி ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சையளித்து வருகின்றனர். மேலும், காயங்கள் குணமானவுடன், அதனை வண்டலுார் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கூடலுார் வன அலுவலர் ராகுல் கூறுகையில், ''பிடிக்கப்பட்ட சிறுத்தையின் காயத்திற்கு, தினசரி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை வனப்பகுதியில் விடுவிப்பதற்கு பதில், வண்டலுார் மிருககாட்சி சாலைக்கு கொண்டு செல்ல உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். உத்தரவு வந்தவுடன், வண்டலுார் கொண்டு செல்லப்படும்,'' என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...