கோவை : கோவை வெள்ளிங்கிரி மலையேறப் பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ள நிலையில், அவர்களின் பாதுகாப்பு கருதி இரவில் தங்க தடை அறிவித்துள்ளது.

சுமார் 5.5 கி.மீ. தூரம் செல்லும் இதன் மலைப்பாதை மிகவும் கரடுமுரடாக இருக்கும். ஆகையால், இந்த மலைப் பாதையில் பக்தர்கள் செல்ல ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை அனுமதி வழங்கப்படும். இந்த நாட்களில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமிருப்பதால், இரவில் மலையிலே தங்குவது பாதுகாப்பளிக்காது. எனவே, காலை வேளை மலையேறத் தொடங்கி இருட்டுவதற்குள் திரும்பிவிட வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, முள்ளங்காடு முதல் வெள்ளிங்கி ஆண்டவர் கோயில் வரையுள்ள சாலையில் இரவு நேரத்தில் யானை நடமாட்டம் உள்ளது. இதனால், இந்த வழித்தடத்தில் மாலை 6 மணிக்கு மேல் வருவதைப் பக்தர்கள் தவிர்க்க வேண்டும், என்றார்.
மேலும், மலையேறும் பக்தர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. எளிதில் தீ பிடிக்கும் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல கூடாது. அதிகாலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டு, இரவிற்குள் கீழே திரும்ப வேண்டும் போன்றவற்றை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.