கோவையில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போஸ்கோ சட்டத்தில் கைது

கோவை : ஆலந்துறை அருகே உள்ள போளுவாம்பட்டி பகுதியில் தந்தையே மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : ஆலந்துறை அருகே உள்ள போளுவாம்பட்டி பகுதியில் தந்தையே மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம், ஆலாந்துறை அருகே உள்ள போளுவாம்பட்டி பகுதியில் உள்ள வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் ராமலிங்கம் (35). இவர் சுமைதூக்கும் தொழிலாளியாக பணி செய்து வருகிறார். 

இவருக்கும் இவரது மனைவி சுதா (எ) லட்சுமிக்கும் திருமணம் ஆகி சுமார் 13 வருடங்கள் ஆகிறது. இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தை தற்போது ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். 

அதேபோல, சிறுமியின் தாயார் ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். ஆகையால், சிறுமி தனது பாட்டி வீட்டிலும், அவரது வீட்டிலும் பகல், இரவு என மாறி சூழலுக்கு தகுந்தாற்போல வசித்து வந்தார். 

மேலும், லோடிங் வேலை சரிவர இல்லாததால், தந்தை வீட்டில் இருந்திருக்கிறார். அப்பொழுது உணவருந்த வந்த சிறுமியை பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளாக்கியிருக்கிறார். 

தொடர்ந்து, இதைப் போலவே பாலியல் வன்கொடுமை செய்து வந்த நிலையில், தற்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, எழுந்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் தந்தை ராமலிங்கத்தின் மீது பேரூர் அனைத்து மகளிர் போலீசார், போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெற்ற தந்தையே பிள்ளையின் மீது பாலியல் வன்கொடுமை செய்தது அனைவர் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...