கோவையில் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி பணம் பறித்த கொள்ளையர்கள் கைது

கோவை : சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறித்த இரண்டு வழிப்பறிக் கொள்ளையர்களைப் சிங்காநல்லூர் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை : சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறித்த இரண்டு வழிப்பறிக் கொள்ளையர்களைப் சிங்காநல்லூர் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

தேனி மாவட்டம், கம்பம் பகுதியை சேர்ந்த முருகேசனின் மகன் வெங்கடேசன் (35). இவர் சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வுக்காக வந்துள்ளார். இதையடுத்து, நேர்முகத்தேர்வு முடிந்து நிலையில், நேற்று மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சென்றுள்ளார். 

அப்போது இரவு சுமார் 11 மணியளவில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்தின் முன் சென்று கொண்டிருந்த வெங்கடேசனை அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளனர். 

இதையடுத்து, அவரின் கையில் இருக்கும் பணத்தை கேட்டுள்ளனர். ஆனால், அவரிடம் ரூ.200 மட்டுமே இருந்தது. அதை வழிப்பறிக் கொள்ளையர்கள் பிடுங்கிக் கொண்டு தப்பிச் சென்றனர். 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட வெங்கடேசன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விரைந்து சென்ற ஆய்வாளர் ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர் அர்ஜூன் தலைமையிலான காவலர்கள் சிங்காநல்லூர் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதேபோலவே, வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகள் குறித்தும் விரைவாகத் தகவல்களை திரட்டி குற்றவாளிகளை தேடி வந்தனர். 

இந்த நிலையில் சந்தேகத்துக்கிடமாக சிங்காநல்லூர் ரயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த இருவரை விசாரித்த பொழுது இவர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இவர்களைக் கைது செய்து விசாரணை செய்தனர். 

அதில், இவர்கள் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமானின் மகன் அப்பாஸ் (19), மற்றும் முத்துசாமியின் மகன் அசோக் (23), என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் பயன்படுத்திய கத்தியை கைப்பற்றி, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...