கோவை : கவுண்டம்பாளையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பம் மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, கவுண்டம்பாளையம் ஜி.என். மில்ஸ் பேருந்து நிலையம் அருகே அனைத்து கட்சிகளின் கொடிக்கம்பங்கள் உள்ளது. இதில், ம.தி.மு.கவின் கொடிக்கம்பமும் உள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு இந்த கொடிக்கம்பத்தை மர்மநபர்கள் வெட்டி சாய்த்து விட்டு சென்றுள்ளனர். இன்று காலை இதனைப் பார்த்த மதிமுக நிர்வாகிகள் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
கவுண்டம்பாளையம் பகுதி செயலாளர் சம்பத் இந்த புகாரை அளித்துள்ளார். மேலும், இந்த புகாரில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் மதிமுகவின் கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்திருப்பார்கள் என சந்தேகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, துடியலூர் போலீசார் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் சோதனை செய்து குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருப்பூர் வந்தபோது மதிமுக சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. இதற்கு இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு எதிர்ப்புகள் வந்த நிலையில், தற்போது மதிமுகவின் கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டது பாஜகவினர் மற்றும் ஹிந்து அமைப்புகள் மீது சந்தேகங்களை எழுப்புவதாக இருக்கிறது என மதிமுகவினர் தெரிவித்தனர்.