கோவையில் கரும்புகையை வெளியேற்றும் தனியார் கம்பெனியை மூடக்கோரி பொதுமக்கள் மனு

கோவை : அக்னி ஆயில் கம்பெனியில் இருந்து வெளிவரும் கரும்புகையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் அதனை மூட வலியுறுத்தி வீரபாண்டி பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை : அக்னி ஆயில் கம்பெனியில் இருந்து வெளிவரும் கரும்புகையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் அதனை மூட வலியுறுத்தி வீரபாண்டி பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

கோவை மாட்டம், வீரபாண்டி பேரூராட்சி நெடுஞ்செழியன் நாவலர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், அக்னி ஆயில் கம்பெனி என்ற பெயரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் புகையால் அங்கு வசிப்பவர்கள் பாதிப்படைவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

அந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அந்த கம்பெனியில் இருந்து வரும் கரும்புகையால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டு இருந்தனர். 

மேலும், இந்த தொழிற்சாலை 24 மணி நேரமும் இயங்கி வருவதால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மன அழுத்தம் காதுவலி, தலைவலி உள்ளிட்ட உபாதைகளால் அவதிப்படுகிறோம். எனவே, இதனை உடனடியாக மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், என மனுவில் கூறியுள்ளனர். 

மேலும், அப்பகுதி மக்கள் கூறும் போது, இந்த சுகாதாரக் கேடு குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாக உரிமையாளரிடம் கூறியும், அவர் எந்தவித பதிலையும் அளிக்கவில்லை. இதனிடையே, கரும்புகையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளாமல், நிறுவன விஸ்தரிப்பை செய்து வருகிறார், என குற்றம் சாட்டினர். 

மேலும், ஆயில் கம்பெனியில் இருந்து வரும் புகையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், தங்களது மனு மீது நடவடிக்கை எடுத்து வாழ வழிவகை செய்ய வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...