கோவை : கோவையில் காதலர் தின கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஹிந்து பாரத் சேனா அமைப்பினர் மனு அளித்துள்ளனர்.
கோவை : கோவையில் காதலர் தின கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஹிந்து பாரத் சேனா அமைப்பினர் மனு அளித்துள்ளனர்.

உலகம் முழுவதும் காதலர் தினம் வரும் வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு, இந்தியா முழுவதும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தன்று காதலர்களைத் தாலி கட்ட சொல்வது, பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் கூடும் காதலர்களை விரட்டுவது, தனியார் விடுதிகளில் காதலர் தினம் கொண்டாடுவது ஆகிய செயல்பாடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் மக்கள் ஈடுபடுகின்றனர். ஆகையால், காதலர் தின கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்க ஹிந்து பாரத் சேனா அமைப்பினர் வந்தனர். அப்போது கையில் வைத்திருந்த காதலர் தின அட்டையை எரிக்க முயன்றனர். இதனைக் கண்ட அங்கிருந்த காவலர்கள் அதனை பறித்து விட்டு, மனு அளிக்க அனுமதித்தனர். காதலர் தின அட்டையைக் கிழித்தும், எறிக்கவும் முயற்சித்தவர்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.