கோவையில் நீர்வாழ் பறவைகளின் கணக்கெடுப்பு நிறைவு : பறவைகளின் எண்ணிக்கையில் வெள்ளலூர் குளம் முன்னிலை

வை : வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் வெள்ளலூர் குளத்தில் 75 வகையான பறவையினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கோவை : வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் வெள்ளலூர் குளத்தில் 75 வகையான பறவையினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

கோவை மாவட்டத்தில், வனத்துறை மற்றும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (World Wide Fund for Nature) ஆகியவற்றால் பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த கணக்கெடுப்பில் 65 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். 

இந்த மொத்த கணக்கெடுப்பும் கோவையில் உள்ள 26 குளங்கள் மற்றும் நீர்நிலைகள் ஆகியவற்றில் நடத்தப்பட்டன. கடந்த வருடம் உக்கடம் மற்றும் வெள்ளலூர் குளங்களில் எடுத்த கணக்கெடுப்பின் படி, 166 வகையான நீர்வாழ் மற்றும் அதனோடு தொடர்புடைய பறவைகள் கண்டறியப்பட்டன. 

இந்நிலையில், இந்த வருடம் வெள்ளலூர் குளத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 75 தனி வகையிலான பறவையினங்கள் கண்டறியப்பட்டன. பருவமழை மற்றும் தூர்வாருதல் காரணமாக ஏவியன் இனங்கள் இக்குளத்தை புகலிடமாக கொண்டுள்ளன. 

மேலும், மொத்தமாக 2484 பறவைகள் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. போன வருடத்தைவிட இவ்வருடம் பறவைகள் எண்ணிக்கை குறைந்துள்ளதிற்கு குளங்கள் மற்றும் அணைகளில் தண்ணீர் மட்டம் அதிகம் இருப்பதே என்கிறார் இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் இணை இயக்குனர் டி.பூமி நாதன். 

கடந்த வருடம் 160க்கும் மேலான பறவையினங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த வருடம் 115 இனங்களே கணக்கிடப்பட்டுள்ளன. கிருஷ்ணம்பதி (72), வாளையார் நீர்தேக்கம் (67), உக்கடம் (67), ஆகிய குளங்களில் அதிகபடியான பறவைகள் எண்ணிக்கையும், உக்குளம் (16), செல்வசிந்தாமணி (20), குமாராசாமி (24), சொட்டையாண்டி (24) ஆகியவற்றில் குறைந்த எண்ணிக்கையிலும் காணப்படுகின்றன. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...