நீலகிரி : உதகை அருகே உள்ள அப்பர்பவானி முனீஸ்வரர் கோயிலில் அப்பகுதி மக்களை சாமி கும்பிட விடாமல் தடுக்கும் வனத்துறையை கண்டித்து, ஆதிவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள அப்பர் பவானி பகுதியில் பிரசித்தி பெற்ற முனீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கடா வெட்டி சாமி கும்பிடுவது வழக்கம். இந்நிலையில், இந்த வருடம் சாமி கும்பிட சென்ற மஞ்சூர் பகுதியை சேர்ந்த சிலரை வனத்துறையினர் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, வனப்பகுதிக்குள் மதுபாட்டில் உள்ளிட்டவற்றை வீசிசெல்வதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுகிறது. இதனால், சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது போல் இனி நடக்காது என்று இப்பகுதி மக்கள் உறுதி அளித்துள்ளனர். தற்போது வனப்பகுதி வழியாகக் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.