கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தடை செய்யப்பட்ட சாணி பவுடரை கரைத்துக் குடித்து பெண் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தடை செய்யப்பட்ட சாணி பவுடரை கரைத்துக் குடித்து பெண் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (43). சமீபத்தில் இவர் மீது வழக்கறிஞர் ஒருவர் தவறான புகார் அளித்துள்ளார். இதையடுத்து, கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் மகேஸ்வரி. இந்நிலையில், மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, மகேஸ்வரி தன் மகளுடன் வந்திருந்தார்.
இதையடுத்து, யாரும் எதிர்பாராத நேரத்தில், மறைத்து வைத்திருந்த தடை செய்யப்பட்ட சாணி பவுடரை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.