கோவை : பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வந்த நிலையில், தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்க முன் வந்துள்ளது.

இன்றைய சூழலில் ஆன்ட்ராய்டு செல்போன் இல்லாதவர்கள் வெகு குறைவு. இணையதள இணைப்பு மூலம் செல்போனில் இருந்த பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவதும், நெட் பேங்கிங் முதல் உணவு வகைகள் ஆர்டர் செய்து கொள்வது வரை அனைத்து தேவைகளையும் அலைபேசி மூலமாகவே பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தனியார் நிறுவனங்கள் தங்கள் வசதிக்கேற்றார் போல, வாடிக்கையாளர்களிடம் கட்டணத்தை வசூலித்து வந்தது. இதற்கிடையே, ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு இலவச சிம் கார்டுடன், இலவச இணைய சேவை அளித்தால் ஏராளமானோர் ஜியோ இணைப்புக்கு மாறினர். இதனைக் கண்ட போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க ஏராளமான சலுகைகளோடு சந்தையில் போட்டி போட்டு கொண்டு வாடிக்கைளர்களுக்கு சலுகைகளை வழங்கியது.

இந்நிலையிலும் கூட, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் 3ஜி சேவை மட்டுமே வழங்கி வந்தது. இதன் கட்டணங்கள் தனியார் நிறுவனங்களை விட குறைவாக இருந்ததாலும், பல்வேறு சிறப்பு சலுகைகள் காரணமாக வாடிக்கையாளர்கள் இதனை விரும்பி வைத்திருந்தனர். வெகு நாட்ளாக பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வந்த நிலையில், தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்க முன் வந்துள்ளது. அதனுடைய வாடிக்கையாளர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தற்போது பி.எஸ்.என்.எல் அலுவலகங்களில் தங்களது அடையாள அட்டையைக் கொடுத்து வாடிக்கையாளர்கள் புதிய சிம் கார்டை இலவசமாகப் பெற்று வருகின்றனர். மேலும், புதிதாக பெற விரும்புவார்கள் ரூ.80 கொடுத்துப் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான வாடிக்கையாளர்கள் அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்,.க்கு மாற ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், தனியார் நிறுவனங்கள் சிம் கார்டு வைத்திருப்பவர்கள் போர்ட் மாற்றி புதிய பி.எஸ்.என்.எல் சிம் கார்டு பெற்று கொள்ளலாம், என்றனர்.