கோவையில் கதவை உடைத்து ஏழரை பவுன் தங்க நகைகள் கொள்ளை : போலீசார் வலை வீச்சு

கோவை : ஒண்டிபுதூர் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து சுமார் ஏழரை பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை சிங்காநல்லூர் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை : ஒண்டிபுதூர் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து சுமார் ஏழரை பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை சிங்காநல்லூர் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

கோவை மாவட்டம், ஒண்டிபுதூர் பகுதியில் வசித்து வரும் காளிமுத்துவின் மகன் கார்த்திகேயன் (37). இவர் தனியார் நிறுவனத்தில் சர்வீஸ் இஞ்சினியர் ஆக பணிபுரிந்து வருகிறார். பணி நிமித்தமாக இவர் கடந்த வாரம் திங்கட்கிழமை திருச்சி சென்றார். இந்நிலையில், வீட்டிலிருந்த அவரது மனைவியும் கடந்த சனிக்கிழமை அவரது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். 

இதையடுத்து, கார்த்திகேயன் திருச்சியிலிருந்து காங்கேயம் சென்று தனது மனைவியை அழைத்துக்கொண்டு, இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது அவர் வீட்டைத் திறக்கும் போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஏழரை பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. 

இதையடுத்து, கார்த்திகேயன் சிங்காநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த சிங்காநல்லூர் குற்றப்பிரிவு போலீசார் மோப்ப நாய் மற்றும் தடயவியல் ஆய்வாளர்கள் உதவியுடன் கொள்ளையர்களின் கைரேகை குறித்து பரிசோதனை செய்தனர். அதேபோலவே, ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் கொள்ளையர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே ஒண்டிபுதூர் பகுதியில் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...