கோவையில் உலக வலிப்பு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

கோவை : கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக வலிப்பு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


கோவை : கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக வலிப்பு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



வலிப்புநோய் என்பது பெரும் மூளையில் பாதிப்பு ஏற்படும் போது ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினையாகும். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் சில நேரங்களில் திடீரென்று மயங்கி விழுந்தவுடன் கை கால்கள் இழுக்கப்பட்டு, வாயில் நுரை வரும். இந்நிலை ஏற்படும் நபரை, வலிப்பு ஏற்படும் பொழுது முதலில் காற்றோட்டமான சூழலை ஏற்படுத்தி அவரது தலையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். மேலும், இந்த பாதிப்பு ஏற்படும் பொழுது தேவையற்று காலத்தை வீணடிக்காமல் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறுவது சிறந்தது. 

இதையடுத்து, இந்நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உலகம் முழுவதும் இன்று வலிப்பு நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கோவை அரசு மருத்துவமனையில் வலிப்பு நோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நீயுராலஜிக்கள் சொசைட்டி சார்பாக மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அசோகன், இந்த பேரணியை கொடி அசைத்துத் தொடக்கி வைத்தார். 

மேலும், விழிப்புணர்வு பேரணியில் வலிப்பு நோய் பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் வலிப்பு நோய் குணமடைய செய்வது குறித்தான பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தப்பட்டிருந்தன. அதோடு, பொதுமக்களுக்கு துண்டு பிரசாரங்கள் வழங்கப்பட்டன. இந்த பேரணியானது அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவமனையின் அலுவலர்கள், நரம்பியல் நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...