திருப்பூரில் 100 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை திட்டம் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

திருப்பூர் : திருப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் : திருப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். 

திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திருப்பூர் எம்.பி. சத்தியபாமா, திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 



இந்த விழாவில் புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, விழா மேடையில் இருந்து, சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையை காணொலி காட்சி மூலமாக பச்சைக் கொடியசைத்து பிரதமர் தொடங்கி வைத்தார். 

முதற்கட்டமாக, சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார். இதையடுத்து, இரண்டாம் கட்டமாக, செயல்படுத்தவுள்ள மெட்ரோ ரயில் பணிகளுக்கு முதற்கட்டத்திற்கு அளித்தது போல 50% நிதி உதவியினை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக முதல்வர் நேற்று பிரதமர் மோடியிடம் கடிதம் கொடுத்தார். 



மேலும், பிரதமர் மோடி, திருப்பூரில் ரூ.75 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் 100 படுக்கை வசதி கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமான பணி, திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட இருக்கும் ஒருங்கிணைந்த கட்டிடம், சென்னை கே.கே.நகரில் நவீன வசதிகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மற்றும் 470 படுக்கை வசதி கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஆகிய திட்டங்களை தொடங்கி வைத்தார். 

அதே போலவே, எண்ணூர் கடற்கரையில் உள்ள (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரே‌ஷன்) பி.பி.சி.எல் முனையம், சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரே‌ஷன் நிறுவனத்துக்கு (சி.பி.சி.எல்.) குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டங்களை தொடங்கி வைத்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...