ஐஸ் கிரிம் மற்றும் செல்போன் போன்ற சேவையில் தான் ஃபேமிலி பேக் திட்டத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம், ஆனால் திமுக -காங்கிரஸ் கூட்டணியும் ஒரு ஃபேமிலி பேக் திட்டத்தை போன்று தான்.
திருப்பூர்: திருப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி 20000 தொண்டர்கள் மத்தியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து கடுமையான விமர்சனம் செய்தார்.
இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது ;
ஐஸ் கிரிம் மற்றும் செல்போன் போன்ற சேவையில் தான் ஃபேமிலி பேக் திட்டத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம், ஆனால் திமுக -காங்கிரஸ் கூட்டணியும் ஒரு ஃபேமிலி பேக் திட்டத்தை போன்று தான்.

என்ன விந்தை என்றால், இவர்கள் கூட்டணி மூலம் தான் ஃபேமிலி பெயில் என்று ஒரு புதிய வார்த்தை உருவாகியுள்ளது.
கர்மவீரர் காமராஜர் கற்பனை செய்த ஊழலற்ற ஒரு ஆட்சியை பிஜேபி அரசால் மட்டுமே தர முடியும்.
2019 ஆண்டு பிஜேபி அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு 5 லட்சம் வரை வரி விலக்கு அறிவித்துள்ளது.
ஆனால் முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் பிஜேபி அரசின் வரி விலக்கு கொள்கைகளை நடுத்தர மக்களுக்கு ஆனது இல்லை என்று தவறான பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் அவர் நடுத்தர வர்க மக்களை கேவலமாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் அரசு ரபேல் போர் விமான விவகாரத்தை வைத்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை கைபற்றலாம் என்று கனவு கண்டு வருகிறது.
ஆனால், உண்மையில் வாஜ்பாய் அரசு பொறுப்பு ஏற்ற பிறகே இந்திய பாதுகாப்பு துறை வளர்ச்சி அடைந்தது.
பா ஜ க தலைமையிலான கூட்டணி விவசாயிகள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், காங்கிரஸின் பொய் வாக்குறுதிகளை மக்கள் ஏன் நம்ப வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.

அதேபோல ஜி ஏஸ் டி வரி சலுகைகள் மூலம் சிறு மற்றும் குறு தொழில் முந்தய ஆண்டுகளை காட்டிலும் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.