திருப்பூர் : திருப்பூரில் பாஜக சார்பில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
திருப்பூர் : திருப்பூரில் பாஜக சார்பில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
திருப்பூர் மாவட்டம், பெருமணலூரில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் அவர் தொண்டர்கள் அணிந்திருந்த வேஷ்டியை, தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையென அடையாளப்படுத்தினார்.

சுமாராக 20 ஆயிரம் தொண்டர்கள் வருகை புரிந்திருந்த அந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் - திமுக கூட்டணி குறித்து விமர்சனம் செய்தார்.
"நாம் அனைவருமே ஐஸ்கீரிம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் போன்றவற்றில் பேமலி பேக் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதுபோலவே, காங்கிரஸ்-திமுக கூட்டணியும். அவர்களே "பேமிலி பெயில்" முறையை அறிமுகப்படுத்தியவர்கள் என குடும்ப அரசியலை சுட்டி காட்டினார்.

இதையடுத்து, திருப்பூரில் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் முனைப்பு பற்றி பேசுகையில், அவற்றின் நலனுக்காக ஜி.எஸ்.டி வரிக் கொள்கையில் மறுசீரமைப்பு மற்றும் பல நலத்திட்டங்களை செய்யப்போவதாக பிரதமர் அறிவித்தார்.

மேலும், அவர் பேசும் போது தொழில் நிறுவனங்களுடைய நகரமான திருப்பூர், ஜவுளித்துறையில் மட்டும் தனித்து நிற்கவில்லை அது போராளிகளுக்கும் சொந்தமான நகரம் என்றார். இங்கு, திருப்பூர் குமரன், தீரன் சின்னமலையின் தைரியம் இந்த நாட்டு மக்களுக்குப் பெரிய உத்வேகத்தை வழங்கிக்கொண்டிருக்கிறது. மேலும், இப்பகுதியில் தான் மீண்டும் நமோ என்ற வாசகங்களைத் தாங்கிய டி-ஷர்டுகளும், தொப்பிகளும் பிரபலமாகிக்கொண்டிருக்கின்றன. அது இங்கிருந்து தான் உற்பத்தி செய்யப்படுகிறது என்றார்.
"ஐக்கிய முற்போக்கு கூட்டணி விவசாயிகளுக்கு பொய்வாக்குறுதிகளை கூறிவருகிறது. ஏற்கனவே, தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம், விவசாயிகளின் நலன் குறித்து சிந்தித்து அதனை மேம்படுத்தும் போது ஏன் பொய்வாக்குறுதிகளை நம்ப வேண்டும், என்றார் பிரதமர் மோடி.
இதனிடையே , பிரதமர் மோடி முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தை, ரீ கவுண்டிங் மினிஸ்டர் எனக் கேலி செய்தார். அதாவது, மறுவாக்கு எண்ணிக்கை அமைச்சர். அவர், ஐஸ்கிரிமும், மினரல் வாட்டரும் வாங்கும் நடுத்தர வர்க்க மக்கள் விலைவாசி ஏற்றத்தினை குறித்து கவலைப்படமாட்டார்கள் எனக் கிண்டலாக தெரிவித்தார். இந்நிலையில், இன்றைய மத்திய அரசு நடுத்தர வர்க்க மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது என்றார். மேலும், அவர் மத்திய அரசு இன்றைக்கு, ஊழல் இல்லாத ஆட்சியை முன்னாள் காமராஜர் விரும்பியபடியே, வழங்கி வருகிறது என பெருமிதம் பொங்க கூறினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை துணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதற்கு முன்பாக, சென்னை கே.கே. நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவமனையைக் காணொளி மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.