நீலகிரி : உதகையில் 30வது சாலை பாதுகாப்பு வார நிறைவு விழா மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது.

கடந்த 4ம் தேதி முதல் தமிழகமெங்கும் போக்குவரத்துத்துறை, காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் நடைபெற்று வந்தது. ஒரு வாரம் நடைபெற்ற இந்த சாலை பாதுகாப்பு வார விழாவின் நிறைவு விழா வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் வாகன ஓட்டிகளுக்கான சாலை பாதுகாப்பின் அவசியத்தையும் பாதுகாப்பான பயணத்தின் அவசியத்தையும் கோவை மண்டல வட்டார போக்குவரத்து இணை ஆணையாளர் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. அதில், இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இதில் கலந்து கொண்ட அரசு உயர் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்தும், விதிமுறைகள் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர்.
மேலும், நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.செல்வராஜ், விபத்தில்லா சாலை பயணத்தை கடைபிடிப்பதன் அவசியத்தை உறுதிமொழியாக கூற, கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.