நீலகிரி : உதகையில் இரண்டு மணி நேரமாக பலத்த மழை பெய்ததால், கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலைகளில் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கு பிறகு இன்று மதியம் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இரண்டு மணிநேரம் பெய்த இந்த மழையின் காரணமாக, சாலையோரத்தில் உள்ள கால்வாயில் வெள்ளம் நிரம்பியது.
இதையடுத்து, கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலைகளில் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக இன்று உதகைக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப்பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். மேலும், எதிர்பாராத பலத்த மழையின் காரணமாக உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.