நீலகிரி : உதகை தாவரவியல் பூங்காவில் அதிகரித்து வரும் குரங்களால் சுற்றுலாப்பயணிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்காவில், நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சீசன் நாட்கள் அல்லாது, சாதாரண நாட்களில் கூட, 5, 000 முதல், 6,000 ஆயிரம் வரை வெளியூர் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களும் வருகின்றனர்.
இந்நிலையில், சமீப காலமாக, தாவரவியல் பூங்காவில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கூட்டமாக வரும் குரங்குகள், சுற்றுலா வரும் சிறுவர்களின் கையில் உள்ள தின்பண்டங்களை பறித்து செல்வது தொடர்கிறது. மேலும், பூங்காவினுள் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் வீசப்படும் உணவு கழிவுகளை கிளறி உண்பதால், புல்தரை மற்றும் நடைபாதைகளில் கழிவுகள் சிதறி கிடக்கின்றன.
பெரும்பாலான நேரங்களில், குரங்குகள் சுற்றுலா பயணிகள் எடுத்து செல்லும் பைகளில் உணவுப் பொருட்கள் வைத்திருப்பின், அதனை பறித்து உண்ணுவதற்காக, பின் தொடர்கின்றன. இந்த செயல்களால் சுற்றுலாப்பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சுற்றுலாப்பயணிகள் கூடும் தாவரவியல் பூங்காவில் நடமாடும் குரங்குகளை, கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விடுவிப்பது அவசியமாகும்.