பேரூர் படித்துறை பாதுகாக்கும் களப்பணி தொடக்கம்

கோவை : பேரூர் படித்துறையில் சாக்கடை கழிவுகள் தேங்காமல் வெளியேறும் வகையில் சீரமைக்க நொய்யல் ஆற்றைத் தூர்வாரும் பணி இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது.

கோவை : பேரூர் படித்துறையில் சாக்கடை கழிவுகள் தேங்காமல் வெளியேறும் வகையில் சீரமைக்க நொய்யல் ஆற்றைத் தூர்வாரும் பணி இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது. 

கோவை மாவட்டம், பேரூர் படித்துறையில் சுற்று வட்டார பகுதிகளில் குவிந்திருந்த பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அகற்றும் இந்த களப்பணியினை சமூக ஆர்வலர் அன்பரசு தொடங்கி வைத்தார். 



அதில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பேரூர் பஞ்சாயத்து பொதுமக்கள், பொதுப்பணித்துறை, பணியாளர்கள் உட்பட பலருடன் இணைந்து பணியாற்றினார்கள். 



இந்த நிகழ்வின் போது, தன்னார்வலர்கள் கோவில் அருகில், படித்துறை அருகே உள்ள கடைகளில் பொது மக்களிடம் தண்ணீரில் தூக்கி எறியப்படும் துணிகள், பிளாஸ்டிக் குப்பைகள், கண்ணாடி பாட்டில்கள் இவைகளால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 



மேலும், களப்பணியின் இறுதியில் காந்தி அஸ்தி கலசம் முன்பு நொய்யல் படித்துறையை பாரம்பரியம் மாறாமல் காப்போம் என்ற உறுதிமொழியுடன், வரும் வாரம் பணிகள் குறித்து திட்டமிடப்பட்டது. இந்த பணியில் தன்னார்வலர்கள், பொதுமக்கள் அரசுத்துறை, அர்ச்சகர்கள் சங்கம் அனைவரும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...