நீலகிரி : குன்னூர் அருகே உள்ள உபதலை கிராமத்தில் இன்று காலை கூட்டமாக புகுந்த காட்டெருமைகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள உபதலைப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தேயிலைத்தோட்டங்கள் உள்ளன. மேலும், இப்பகுதியில் உள்ள காந்திநகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், இன்று கூட்டமாக வந்த காட்டெருமைகள் தேயிலைத்தோட்டம் வழியாகக் குடியிருப்பு பகுதிகளைக் கடந்துசென்றதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
இந்த காட்டெருமை கூட்டம் எந்த வனப்பகுதியில் இருந்து திடீரென ஊருக்குள் வந்தது என்று வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். அண்மைக்காலமாக, குன்னூர் பேருந்து நிலையம், ரயில் தண்டவாளம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டெருமையால் மக்கள் அச்சடைந்துள்ள நிலையில், தற்போது நகரின் முக்கிய பகுதிகளில் உலா வந்த இந்த காட்டெருமைகளை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.