நீலகிரியில் மலை ரயிலுக்கென புதிதாக 15 ரயில் பெட்டிகள் : ரயில்வே பொது மேலாளர் தகவல்

நீலகிரி : நீலகிரியில் மலைரயிலுக்கென மார்ச் மாதத்துக்குள் புதிதாக, 15 பெட்டிகள் வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


நீலகிரி : நீலகிரியில் மலைரயிலுக்கென மார்ச் மாதத்துக்குள் புதிதாக, 15 பெட்டிகள் வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



நீலகிரி மலைரயில் உலக பிரசித்திபெற்றதாகும். யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இந்த நீராவி மலைரயிலில் பயணிக்க உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மலை ரயிலை மேம்படுத்தும் பணிகள், கடந்த ஓராண்டாக நடந்து வருகின்றன. பழமை வாய்ந்த நிலக்கரி நீராவி இன்ஜினை புனரமைத்து இயக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இதையடுத்து, மேட்டுப்பாளையம், குன்னுார், உதகை, கேத்தியிடையே இயக்கப்படும் சிறப்பு மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதால், சுற்றுலாப்பயணிகளின் வசதிகேற்ப இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் புதிதாக, 15 பெட்டிகள் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 



இந்த ரயில் பெட்டிகளில் நவீனகழிப்பிட வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக வரும் இந்த மலைரயில் பெட்டிகள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...