கோவை : கோவையில் முதன்முறையாக ஸ்கல் இன்டர்நேஷனல் கிளப் லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் நேற்று தொடங்கப்பட்டது.
கோவை : கோவையில் முதன்முறையாக ஸ்கல் இன்டர்நேஷனல் கிளப் லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் நேற்று தொடங்கப்பட்டது.

1934ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்கல் இன்டர்நேஷனல் அமைப்பு உலகெங்கிலும் உள்ள சுற்றுலாத் தலைவர்களின் அதிகாரப்பூர்வ தொழில் அமைப்பு ஆகும். 84 ஆண்டுகள் பழமையான இந்த அமைப்பு தான் சுற்றுலா மற்றும் சுற்றுலாத்துறையின் சர்வதேச குழுவாகும். சிறப்பு என்னவெனில் இந்த அமைப்பு தற்போது கோவையில் நிறுவப்பட்டுள்ளது.

உலகளவில் 96 தேசங்களில் 15000 உறுப்பினர்கள், 480 கிளப்கள் வைத்திருக்கும் ஸ்கல் கிளப், லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் வைத்து கோவையில் நேற்று தொடங்கப்பட்டது. பிராந்திய சுற்றுலாக்களை மேம்படுத்தும் நோக்கத்தில், தொடங்கப்பட்ட இந்த கிளப்பின் தொடக்க விழாவில் ரெசிடன்சி டவர்ஸ் பொது மேலாளர் சார்லஸ் பேபியன், தலைவராக அறிவிக்கப்பட்டார்.
கோவை ஸ்கல் இன்டர்நேஷனல் கிளப்பின் மைய உறுப்பினர்களும் இந்நிகழ்வில் அறிவிக்கப்பட்டார். இந்த நிகழ்வில் கோவை மற்றும் நீலகிரி பகுதிகளில் சுற்றுலா மற்றும் சுற்றுலா நிறுவனங்களை மேம்படுத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும், புது டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், புனே, கோவா, திருவனந்தபுரம், கொச்சின், ஶ்ரீநகர், அகமதாபாத் ஆகிய பகுதிகளில் உள்ள ஸ்கல் கிளப் பிரதிநிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.