பிளாட்டினம் ஜூப்ளி கொண்டாட்டம் : 76வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது கோவை ரோட்டரி கிளப்

கோவை : கோவை ரோட்டரி கிளப், 75 ஆண்டு கால நிறைவை கொண்டாடும் விதமாக பிளாட்டினம் ஜூப்ளி கொண்டாட்டம், ஜி.டி., ஆடிட்டோரியத்தில் நேற்று நடைபெற்றது.

கோவை : கோவை ரோட்டரி கிளப், 75 ஆண்டு கால நிறைவை கொண்டாடும் விதமாக பிளாட்டினம் ஜூப்ளி கொண்டாட்டம், ஜி.டி., ஆடிட்டோரியத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்த விழாவில், தலைமை விருந்தினராக ரோட்டரியன் கல்யாண் பானர்ஜி பங்கேற்றார். கவுரவ விருந்தினராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். 



இந்நிகழ்வில், விழா தலைவர் கார்த்திகேயன் பேசியதாவது :- இந்தியாவில் உள்ள பழமையான கிளப்புகளில் ஒன்றாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த நிகழ்ச்சியில் பல புதிய உறுப்பினர்கள் இணைய உள்ளார்கள், இவ்வாறு பேசிய அவர் கிளப்பினுடைய வரலாற்றை ஒருமுறை அனைவருக்கும் விளக்கினார். 



"பொதுமக்களின் அன்றாட தேவைக்காக, செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதால், இஸ்ரோ பணியும் சமூக சேவைதான். அடுத்து, விண்ணில் அமைய இருக்கும் சர்வதேச விண்வெளி மையத்தில், இந்தியாவின் பங்கு பிரதானமாக இருக்கும். நம் நாட்டில் அரசியல் குறித்து பேசும் பலரும் ஓட்டளிக்க முன்வருவதில்லை. 

சமூக வலைதளங்களில் விவாதிப்போரில், 80 சதவீதத்தினர் ஓட்டளிப்பதில்லை. தேசத்தை வழிநடத் தும் தலைவரை தேர்ந்தெடுப்பதில், அனைவரின் பங்கும் இருக்க வேண்டும். நம் நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. 



அமெரிக்க விசாவுக்காக நாம் காத்திருக்கும் நிலை மாறி, நம் நாட்டு விசாவுக்காக, மற்ற நாட்டினர் காத்திருக்கும் நிலை விரைவில் வரும்," என இந்தியாவின் வளர்ச்சி பாதை குறித்து பேசினார் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. 



மேலும், இதில் ரோட்டரி கிளப்பில், 40 ஆண்டுகளுக்கு மேலாக உறுப்பினர்களாக இருந்தவர்களும், உறுப்பினர்களும் கவுரவிக்கப்பட்டனர்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...