யுகம் 2019-ன் சிறந்த குறும்படமாக 'சில பெண்களின் கதை' என்ற படம் தேர்வு

கோவை : யுகம் 2019 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட சிறந்த குறும்படத்திற்கான AISA விருதை சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸ் குழுவினரால் இயக்கப்பட்ட 'சில பெண்களின் கதை' என்ற படம் வென்றது.


கோவை : யுகம் 2019 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட சிறந்த குறும்படத்திற்கான AISA விருதை சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸ் குழுவினரால் இயக்கப்பட்ட 'சில பெண்களின் கதை' என்ற படம் வென்றது. 

குமரகுரு நிறுவனங்கள் 35-வது ஆண்டில் ஏழாம் முறையாக யுகம் 2019-ஐ நடத்தியது. இவ்வாண்டு விழாவினை காஸ்மோஸ் நிறுவனமும், அவர்களுக்குத் துணையாக யுனிஸ்பாட்டர் நிறுவனமும் இணைந்து வழங்கினர். இவ்விழாவானது இளைய தலைமுறையினர் தொழில்நுட்பம், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்கும் சிறந்த விழாவாக அமைந்தது. இந்த ஆண்டு கலைக் கல்லூரிகள், பொறியியற் கல்லூரிகள் மற்றும் வணிகப் பள்ளிகளிலிருந்து 12,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்று சிறப்பித்தனர்.



“காலம்”என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு கடந்த 2-ம் தேதியில் நடத்தப்பட்டு வரும் யுகம் 2019 நிகழ்ச்சியில், இளைஞர்களுக்கான பயனுள்ள பாசறையுடன் 130-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் பிறநிகழ்வுகள், 65-க்கும் மேற்பட்ட பயிலரங்குகள், கலாச்சார நிகழ்ச்சிகள், சார்பு நிகழ்ச்சிகள் மற்றும் எழுச்சி உரைகள் ஆகியவை இடம்பெற்றன. இந்நிகழ்வின் சாரத்தைக் கொண்ட 'Compilation of Inspiration' என்ற நூலும் வெளியிடப்பட்டது.



இதனிடையே, 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை டாக்டர் மகாலிங்கம் சுழற்கோப்பை 2019-க்கான, தென்னிந்திய அளவில் கூடைப்பந்து, மகளிருக்கான மாநில அளவில் கையெறிபந்து, கைப்பந்து, மாவட்ட அளவில் பூப்பந்து, கபடி ஆகிய போட்டிகள் குமருகுரு விளையாட்டரங்கில் நடைபெற்றன. இதில், முதலிடம் பெற்ற அணிகள் பின்வருமாறு :- ஹேண்ட் பால் போட்டியில் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி அணியும், கைப்பந்து போட்டியில் சென்னை செஞ்சோசப் அணியும், கபாடியில் சென்னை எஸ்.ஆர்.எம். அணியும், கூடைப்பந்து போட்டியில் சென்னை ஜே.ஐ.டி. மற்றும் ஜே.பி.ஆர். அணிகளும் வெற்றி பெற்றன. 

கே.சி.டி வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள ‘அங்காடி’ எனும் மாபெரும் விற்பனை விழாவில் தொழில்முனைவராக உருவெடுக்கும் மாணவர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களையும், சேவைகளையும் காட்சிப்படுத்தி விற்பனையில் சாதனை படைத்தனர். மேலும், 'ட்ரென்ட்ஸ் 19' நிகழ்வில் ஆடை அலங்காரப் போட்டி, இருசக்கர சாகச நிகழ்ச்சி, ட்ரோன் ரேசிங் லீக், நைட்ரோ ஆர்.சி. ரேசிங் என பல்வேறு நிகழ்வுகள் பார்வையாளர்களை மிகவும் ரசிக்க வைத்தன.

யுகம்’19-ன் சமூக அக்கறையின் வெளிப்பாடாக நாம் இழந்து வரும் தொன்மையான பொம்மலாட்டத்தை மீட்டெடுப்பதற்கான “அடையாளம்” எனும் நிகழ்வும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான “இமைக்கநொடிகள்” எனும் நிகழ்வும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளின் “மீட்டெடு” செயல்பாடுகளும் பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றன. இதுவரை 19,000 பேர்களுக்கு மேல் இந்நிகழ்வு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது



இந்த நிலையில், சிறந்த குறும்படங்களுக்கான (AISA) விருதுக்குரிய தேர்வு விழா இன்று நடைபெற்றது .இவ்விழாவில் Y Not Studios நிறுவனர் சசிகாந்த் தலைமையேற்று சிறந்த குறும்படங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தினர். 'சில பெண்களின் கதை' என்ற குறும்படம் இந்த ஆண்டின் AISA விருதை வென்றது. இந்தக் குறும்படம் ஐ.ஐ.டி. மெட்ராஸ் குழுவினரால் எடுக்கப்பட்டது. மேலும், ஆறு பிரிவுகளில் இந்தக் குறும்படம் விருதை வென்றது.

தொடர்ந்து, இவாமின் நகைச்சுவையாளர் ஜகன்கிருஷ்ணா, இங்கிலாந்து நாட்டின் செல்லோ இசைக்கருவிக் கலைஞர் அலிசன் கெப்ரியெல்லி மற்றும் 21 பேர் கொண்ட அபினோ நடனக்குழு ஆகியோர் கலைநிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...