நாடு முழுவதும் கடந்த 4.5 ஆண்டுகளில் 7.25 கோடி தனிநபர் கழிப்பறைகள்

நீலகிரி : கடந்த நான்கரை ஆண்டுகளில் கிராமங்களில் 7.25 கோடி தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் தெரிவித்தார்.

நீலகிரி : கடந்த நான்கரை ஆண்டுகளில் கிராமங்களில் 7.25 கோடி தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் தெரிவித்தார். 

பத்திரிக்கை தகவல் மையம் சார்பில் ஊரக ஊடகவியலாளர் பயிலரங்கு உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் நேற்று நடந்தது. இந்தப் பயிலரங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இதில், மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் எல். முருகன் தலைமை வகித்து பேசியதாவது :- மத்திய அரசு மக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், முக்கியமானது அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம். இதன் மூலம் அனைத்து மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. இந்த வங்கி கணக்கில் எரிவாயு மானியம் நேரடியாக செலுத்தப்படுவதால், அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகிறது. 



தாழ்த்தப்பட்ட மக்கள் தொழில் நடத்த தொழிலாளர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 490 கோடியில் தொழில் முனையம் லுதியானாவில் பிரதமர் தொடங்கி வைத்தார். பெண் குழந்தைகளுக்காக அஞ்சலகங்களில் செல்வமகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பெண் குழந்தைகள் சேர்க்கப்பட்டு, ரூ. 20 ஆயிரம் கோடி வைப்பு நிதி உள்ளது. மகளிர் தொழில் தொடங்க ஸ்டாண்ட் அப் இந்தியா, முத்ரா, காதி கிராம தொழில்துறை மூலம் கடனுதவி மானியத்துடன் வழங்கப்படுகின்றன. முத்ரா கடன் வழங்குவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. இதுவரை ரூ. 12 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவீதம் தாழ்த்தப்பட்ட மகளிர் பயனடைந்துள்ளனர்.



தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுதந்திரம் பெற்றதில் இருந்து 2014-ம் ஆண்டு வரை 6.5 கோடி கழிப்பறைகள் மட்டும் இருந்தன. கடந்த 4.5 ஆண்டுகளில் 7.25 கோடி தனிநபர் கழிப்பறைகள் கிராமங்களில் கட்டப்பட்டுள்ளன. அனைவருக்கும் வீடு திட்டத்தில் ஒரு கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 82 சதவீத கிராமங்கள் சாலை மூலம் இணைக்கப்பட்டுள்ளன. 1.5 லட்சம் கிராமங்களில் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடி பேர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். இதன்மூலம், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள 8 கோடி குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது, எனக் கூறினார். 

இந்திய அஞ்சலக வங்கி சேவை மற்றும் அஞ்சலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் காப்பீடு, வங்கி சேவை மற்றும் சேமிப்பு திட்டங்கள் குறித்து அஞ்சலகத்துறை கோவை மண்டல வர்த்தக மேம்பாட்டு உதவி இயக்குநர் பி.ஆறுமுகம் மற்றும் ஆயுஸ்மான் பாரத் திட்டம் குறித்த தமிழ்நாடு சுகாதார திட்ட மருத்துவ அலுவலர் தேவசேனா விளக்கினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...