கோவையில் சரக்கு இணைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் : ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் பங்கேற்பு

கோவை : கோவையில் நடைபெற்ற சரக்கு இணைப்பு பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை : கோவையில் நடைபெற்ற சரக்கு இணைப்பு பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

இந்திய ஏற்றுமதி நிறுவனத்தின் கூட்டமைப்பு மற்றும் கோவையைச் சேர்ந்த இந்திய சீடிரேட் அமைப்பும் இணைந்து சரக்கு இணைப்பு பற்றிய ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இதில், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், துறைமுக பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் முதலீடுகளை அதிகரித்து தொழில்நுட்பத்துறையை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் உலகளவில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் இந்திய ஏற்றுமதி நிறுவனக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் எம். ரபீக் அகமது பேசுகையில், "முதலீடுகளை அதிகரித்து மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம். இதன்மூலம், நாட்டை உலகளாவிய மதிப்புச் சங்கிலி தொடர்பான உற்பத்தியில், அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல உதவும்," என்றார். 

திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் மதுரை மாவட்டங்களில் லாஜிஸ்டிக் விலை உயர்ந்து காணப்படும் நிலையில், லாஜிஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு ஏற்ற வகையில் கொள்கை முடிவுகளை மாற்றி அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

இதனிடேயே, ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யப்படும் சரக்குகளை சரிபார்த்து அனுப்பும் நேரத்தைக் குறைக்கும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுங்கத்துறை தலைமை ஆணையர் ரஞ்சன் குமார் ரவுத்ரி தெரிவித்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...